டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய கனேடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
செவ்வாயன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஷிவாங்க் அவஸ்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது இந்த ஆண்டு டொராண்டோவில் பதிவான 41 ஆவது கொலை வழக்கு என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நரப் தப்பியோடியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம், டொராண்டோவில் 30 வயதான இந்தியப் பெண் ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















