போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,000 கோல் மைல்கல்லை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளார்.
காயங்கள் இல்லை என்றால், நான் நிச்சயமாக அந்த எண்ணிக்கையை எட்டுவேன் என்று ரொனால்டோ கூறியதாக Goal.com தெரிவித்துள்ளது.
40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது 956 கோல்களை அடித்துள்ளார்.
இந்த நிலையில் ஆயிரம் கோல்கள் என்ற நம்பமுடியாத சாதனையை அடைய வெறும் 44 கோல்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் உள்ளார்.
டுபாயில் சிறந்த மத்திய கிழக்கு வீரராகப் பெயரிடப்பட்ட பின்னரும், அல்-நாசர் நட்சத்திரத்தின் விளையாட்டு மீதான ஆர்வம் வலுவாக உள்ளது.
மேலும் இந்த மைல்கல்லை அடைய இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாட அவர் எதிர்பார்த்துள்ளார்.
இந்த நிலையில், குளோப் கால்பந்து விருதுகளில் ரொனால்டோ தனது நான்கு இலக்க (1000) மைல்கல்லை எட்டவும் கிண்ணங்களை வெல்லவும் தனக்கு இருந்த உந்துதலைப் பற்றிப் பேசினார்.
பல விளையாட்டு ஆளுமைகள் இருக்கும் ஒரு விழாவில் தான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரொனால்டோ இதன்போது கூறியதாக Goal.com செய்தி வெளியிட்டுள்ளது.
என் மனைவி உட்பட நம்பமுடியாத மக்களை நான் சந்திப்பதால் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
தொடர்ந்து விளையாடுவது கடினமானது, ஆனால் அதனைத் தொடர எனக்கு இன்னும் ஆர்வமும் உந்துதலும் உள்ளது.
நான் மத்திய கிழக்கிலோ அல்லது ஐரோப்பாவிலோ விளையாடினாலும் பரவாயில்லை; நான் தொடர்ந்து பட்டங்களை வென்று அனைவரும் அறிந்த மைல்கல்லை அடைய விரும்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
காயங்கள் எதுவும் ஏற்படாவிட்டால் நான் இலக்கினை உறுதியாக அடைவேன் என்று நம்புகிறேன்.
விழாவினை அனுபவியுங்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அல்-நாசர் நட்சத்திரம் இதன்போது கூறியதாக Goal.com தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற கால்பந்து வீரர் தனது சிறந்த வாழ்க்கைக்கு ஓய்வு பெறுவதற்கு முன்பு
இதவேளை, ரொனால்டோ 1000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்ட வேண்டும் என்று போர்ச்சுகல் தலைமை பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சனிக்கிழமை (27) ரொனால்டோவின் இரட்டை கோல் மூலம் அல் அக்தூத் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய பின்னர் அல்-நாசர் அணி தொடர்ச்சியாக 10 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த இரட்டைக் கோல்களுடன் ரொனால்டோ தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 956 ஆக உயர்த்தியுள்ளார்.
போர்த்துக்கல் ஜாம்பவான் ஏற்கனவே 225 ஆட்டங்களில் இருந்து 143 கோல்களுடன் முன்னணி சர்வதேச ஆடவர் கோல் அடித்த வீரராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




















