அவுஸ்திரேலிய ஓபன் பிரதான சுற்றில் பங்கேற்கும் மிகவும் வயதான பெண் வீராங்கனையாக 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ் மாறவுள்ளார்.
ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை, ஜனவரி 18 ஆம் திகதி தொடங்கும் இந்தப் போட்டிக்கான வைல்ட் கார்டைப் (wildcard) பெற்றுள்ளார்.
வில்லியம்ஸ் கடைசியாக 2021 ஆம் ஆண்டு மெல்போர்ன் பூங்காவில் அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடினார்.
அப்போது இரண்டாவது சுற்றில் இத்தாலியின் சாரா எர்ரானியிடம் தோற்கடிக்கப்பட்டார்.
2003 மற்றும் 2017 இறுதிப் போட்டிகளில் தனது சகோதரி செரீனாவிடம் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் உலக நம்பர் வன் வீராங்கனை, 2023 முதல் அமெரிக்காவிற்கு வெளியே போட்டியிடவில்லை.
கடந்த ஆண்டு நியூயோர்க்கில் நடந்த அமெரிக்க ஓபனுக்கு வில்லியம்ஸ் திரும்பினார்.
இதனால், ஓபன் சகாப்தத்தில் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது வயதான பெண்மணி ஆனார்.
எனினும், முதல் சுற்றில் செக் கரோலினா முச்சோவாவிடம் 6-3 2-6 6-1 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டார்.

















