இங்கிலாந்தின் 2025 நிதிநிலை அறிக்கை, உழைக்கும் வர்க்கத்தினரை விட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறகிறது.
வருமான வரி வரம்புகளை உயர்த்தாமல் அப்படியே நிறுத்தி வைப்பதன் மூலம், ஊதிய உயர்வு பெறும் தொழிலாளர்கள் மறைமுக வரிச் சுமைக்கு ஆளாவார்கள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனால் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள் என்று பொருளாதார ஆய்வகம் எச்சரிக்கிறது.
இதேவேளை அரசின் மூன்று அடுக்கு பாதுகாப்புத் திட்டத்தால் (triple lock) முதியவர்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவோர் நிதி ரீதியாகப் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகளை மேம்படுத்த இந்த வரி மாற்றங்கள் அவசியம் என அரசாங்கம் வாதிட்டாலும், இது உழைக்கும் மக்களின் வாங்கும் திறனைக் குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறு, புதிய வரிக் கொள்கையானது சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரிடையே ஒரு பொருளாதார இடைவெளியை உருவாக்குகிறது.
இதேவேளை, “வருமான வரிக்கான தனிப்பட்ட கொடுப்பனவை முடக்குவது அனைவரையும் பாதிக்கும், ஆனால் அதிக வரி வரம்புகளுக்குள் இழுக்கப்படுபவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்படுவார்கள் எனவும் இன்று £50,000 சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி ஐந்து ஆண்டுகளில் சம்பள உயர்வு பெற்றாலும் உண்மையில் ஏழையாக இருப்பார்.” என்றும் மத்திய-வலதுசாரி சிந்தனைக் குழுவான CPS குழுவின் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கையின் தலைவர் டேனியல் ஹெர்ரிங் கூறியுள்ளார்.
















