2025 ஆம் ஆண்டில் தேங்காய் சார்ந்த ஏற்றுமதிகள் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளன.
மேலும், அது இந்த ஆண்டு முடிவடையும் போது சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2024 ஆம் ஆண்டில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கணிசமான அதிகரிப்பாகும்.
இது ஆண்டுக்கு ஆண்டு 40% க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
இது இலங்கையின் தென்னை உற்பத்திக்கான ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ குறிப்பிட்டார்.
2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை தேங்காய் சார்ந்த ஏற்றுமதியில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் திறன் உள்ளது – நாடு அதை அடைவதற்கான பாதையில் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















