முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரிவு 8.1.1(c) இன் படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 3 முதல் அமுலுக்கு வரும் வகையில், நவீன் திசாநாயக்கவை உப தலைவராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு பரிந்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது.















