சுகாதாரத் துறையைப் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காணத் தவறியதற்கு பதிலளிக்கும் விதமாக அடுத்தக்கட்ட சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) சிறப்பு மத்திய குழு கூட்டம் நாளை (07) நடைபெற உள்ளது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சும் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று GMOA ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
அதன்படி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து பரிசீலிக்க சங்கம் முடிவு செய்துள்ளது,
நாளை நடைபெறும் சிறப்பு மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.














