ரோக்கி ஸ்டார் யாஷ் இன்று (ஜனவரி 8) தனது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனைத் முன்னிட்டு வெளிவரும் அவரது அடுத்த திரைப்படமான டாக்ஸிக்கின் டீசரை தயாரிப்பாளர்கள் இன்று (08) வெளியிட்டனர்.
அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த டீசர், திடீரென வெடிக்கும் வன்முறையுடன் தொடங்குகிறது.
2 நிமிடம் 51 வினாடிகள் கொண்ட இந்த டீஸர் யாஷை ராயா வேடத்தில் அறிமுகப்படுத்துகிறது.
டீசர் இஒரு கல்லறையில் அமைக்கப்பட்ட பதட்டமான இறுதிச் சடங்கு காட்சியுடன் தொடங்குகிறது.
யாஷ், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படம் 2026 மார்ச் 19 அன்று வெளியாக உள்ளது.

















