இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளின் பயனாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் தொடரும் எனவும், அதன் விளைவாக இந்த வருடம் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.














