ரஷ்யாவிலிருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகள் மீதான வரிகளை குறைந்தது 500 சதவீதமாக உயர்த்த அச்சுறுத்தும் ஒரு சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு வரிகளால் அழுத்தம் கொடுக்கப்படும்.
செனட் சபையில் ட்ரம்பின் நெருங்கிய காங்கிரஸ் நண்பர்களில் ஒருவரான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இந்த விடயத்தை உறுதிபடுத்தினார்.
ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்புடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்துக்காக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இதில் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் தொகுப்பு மொஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கம் கொண்டது.
இந்த நிலையில் மேற்படி புதிய சட்டமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது மிகப்பெரிய செல்வாக்கை வழங்கும்.
மேலும் உக்ரேனில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் போருக்கு நிதியளிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த அவர்களை ஊக்குவிக்கும் என்று தென் கரோலினா குடியரசுக் கட்சி தனது பதிவில் தெரிவித்துள்ளது.




















