மத்துகம பிரதேச சபையின் செயலாளரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரை தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, தனது உத்தியோகபூர்வ வேலைகளில் தலையிட்டதாகக் கூறி மத்துகம பிரதேச சபையின் செயலாளர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முபை்பாட்டுக்கு அமைவாக கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
முறைப்பாட்டின் அடிப்படையில், மத்துகம பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் ஜனவரி 02 ஆம் தகதி கசுன் முனசிங்க காவலில் எடுக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















