ஆப்பிரிக்காவில் நான்கு நாடுகளுக்கான உத்தியோப்பூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் நிலையில் ஒரு குறுகிய பயணமாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12) காலை இலங்கையை வந்தடைந்தார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து நாடு திரும்பும் வழியில் 17 பேர் கொண்ட சீனக் குழுவுடன் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் மற்றும் சீனத் தூதரகத்தின் மூத்த அதிகாரிகள் குழுவினரை விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.
இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பனபோக்கே மற்றும் பிற அமைச்சக அதிகாரிகளும் வருகை தந்த தூதுக்குழுவை வரவேற்க உடனிருந்தனர்.














