(Kent ) கென்ட் பகுதியில் உள்ள (Standford Hill ) ஸ்டாண்ட்ஃபோர்ட் ஹில் திறந்தவெளி சிறையிலிருந்து தப்பியோடிய (Michael Dunn) மைக்கேல் டன் என்ற குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை முதல் தலைமறைவாக இருக்கும் இவரைப் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வரும் சிறை தப்பித்தல் குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதவேளை, குறைந்த பாதுகாப்பு கொண்ட சிறைகளுக்கு அதிக கைதிகள் மாற்றப்படுவதால் பொது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக சிறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் சிறைச்சாலைகளை விரிவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள சூழலில், இத்தகைய பாதுகாப்பு மீறல்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் தற்போதைய நடைமுறைச் சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இங்கிலாந்து சிறை அமைப்பில் நிலவும் சில பிரச்சனைகளாலே கைதிகள் இவ்வாறு தப்பித்து செல்வதாகவும் சமீப காலமாக இந்த நிலை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

















