ஸ்காட்லாந்து அரசு வெளியிட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம், வருமான வரி அமைப்பில் முக்கியமான மாற்றங்களை முன்மொழிகிறது.
குறைந்த வருமானம் ஈட்டும் சுமார் 55 சதவீத மக்கள் இங்கிலாந்தின் பிற பகுதிகளை விடக் குறைவான வரி செலுத்தும் வகையில் வரி வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், £33,500-க்கு மேல் சம்பாதிப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும், ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான வீடுகளுக்கு வரி உயர்த்தப்படும் என்றும் நிதிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் சாதாரணக் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டாலும், பொருளாதார வல்லுநர்கள் இதில் கணிசமான நிதி வெட்டுக்கள் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, தேர்தல் நெருங்கும் வேளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த £68 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவு திட்டம் , சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த வரிச் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வளவு தூரம் பலன் அளிக்கும் என்பதில் எதிர்க்கட்சிகள் தங்கள் ஐயப்பாடுகளைத் தெரிவித்துள்ளன.













