பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள், அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு ஜூரி எனப்படும் நடுவர் குழு இல்லாத விசாரணைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதே இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகும்.
அரசின் இந்த முடிவை எதிர்த்து தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, தங்கள் பதவி விலகல் குறித்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.
தற்போதுள்ள நீதிமன்ற தேக்கநிலையைச் சரிசெய்யவே இம்மாற்றம் என்று அரசு கூறினாலும், இது அடிப்படை சட்ட உரிமைகளை மீறுவதாக வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர்.
நீதிமன்றங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறையை மறைக்க இத்தகைய சர்ச்சைக்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.













