வீட்டு எரிசக்தி கட்டணங்களைக் குறைப்பதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்ற இங்கிலாந்து அரசாங்கம் முயற்சிக்கும் வேளையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சூரிய மின் தகடுகளால் இங்கிலாந்தை நிரப்ப தொழிற்கட்சி தயாராகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை (20) அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் இந்த திட்டமானது இங்கிலாந்தில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு சூரிய மின்கலங்கள், மின்கலங்கள் மற்றும் வெப்ப பம்புகள் ஆகியவற்றை அணுகும் வாய்ப்பை வழங்கும்.
இது வாடிக்கையாளர்கள் மின்சாரத்துக்காக செலுத்தும் தொகையை கணிசமாகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
15 பில்லியன் பவுண்ட்ஸ் வரி செலுத்துவோர் பணத்துடன் ஆதரிக்கப்படும் இந்தத் திட்டங்களின் கீழ், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவ குறைந்த மற்றும் பூஜ்ஜிய வட்டி இல்லாத கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மின்கலங்களுக்கான கடன்களும், வெப்ப பம்புகளுக்கான கடன்களுமாக 7,500 பவுண்ட்ஸ் மானியங்கள் வழங்கப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மக்களை எரிபொருள் வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் இங்கிலாந்து அரசாங்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சூரிய மின்கலங்கள் அல்லது காப்புப் பொருட்களை இலவசமாக நிறுவ நேரடி ஆதரவும் வழங்கப்படும்.













