இங்கிலாந்தில் கவனக்குறைவு மற்றும் மிகை செயல்பாடு குறைபாடு (ADHD) சிகிச்சைக்கான மருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே இந்த மருந்துகளின் பயன்பாடு மற்ற ஐரோப்பிய நாடுகளை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
சமூகத்தில் இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.
இந்நிலையில் பல நோயாளிகள் இதற்கு முன்னதாகவே மன அழுத்தத்திற்கான மருந்துகளைப் பயன்படுத்தியிருப்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
மருந்துப் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், நோயாளிகளுக்குத் தேவையான முறையான ஆதரவை வழங்கவும் அரசாங்கம் தற்போது சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பெரியவர்களிடையே அதிகரித்து வரும் இந்த மருந்துப் பயன்பாடு சுகாதாரத் துறையில் ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















