அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டவிரோத தகவல் சேகரிப்பு வழக்கில், இளவரசர் ஹாரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் உருக்கமான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில் தனது மனைவியின் வாழ்க்கை ஊடகங்களால் பெரும் பாதிப்புக்குள்ளானதாகவும், தனது தனியுரிமை மீறப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
கடந்த 1993 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் பத்திரிகைகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக அவர் பொறுப்புக்கூறலை வலியுறுத்துகிறார்.
இதேவேளை, குறுக்கு விசாரணையின் போது தனது விரக்தியை வெளிப்படுத்திய ஹாரி, சிறு வயது முதலே ஊடகங்களால் தனது தனிப்பட்ட வாழ்க்கை வணிகமயமாக்கப்பட்டதை கடுமையாகச் சாடினார்.
இந்நிலையில் இந்தப் போராட்டம் வெறும் இழப்பீட்டிற்கானது மட்டுமல்லாமல், ஊடகங்களின் தவறான அணுகுமுறைக்கு எதிரான ஒரு நீதிக்கான குரலாகவும் இது பார்க்கப்படுகிறது.
இளவரசர் ஹாரி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இணைந்து முன்னெடுத்துள்ள இந்த வழக்கு, ஊடக அறம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
















