பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்குரன்கெத்த, ரிதீமாலியத்த, கந்தளாய் மற்றும் இரக்குவானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், 41 முதல் 66 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















