அருண்குமார் சேகரன் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ப்ராமிஸ்’. நாயகியாக நதியா நடித்துள்ளார். சரவணதீபன் இசை அமைத்துள்ளார். சங்க மித்ரன் புரொடக் ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், கில்டு தலைவர்
ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் என்.நாகராஜன் வரவேற்றார்.
கே.ராஜன் பேசும்போது, “தமிழ் சினிமாவில் பழிவாங்குவதற்கு என்றே சில விஷயங்கள் நடக்கின்றன. ‘ஜனநாயகன்’ படத்தின் கதாநாயகன் சாதாரணமாக நடித்து இருந்தால், இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து, நான் தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று அடம் பிடித்தார் அல்லவா? அதில் பிடித்தது பிரச்சினை. எந்த அரசாக இருந்தாலும் ஜனநாயகனின் பிரச்சினையை முடித்து தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும். உங்கள் அரசியலுக்காக சினிமாவைப் பழி வாங்காதீர்கள்” என்றார்.
















