நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) உத்தரவிட்ட முந்தைய ஒற்றை நீதிபதி உத்தரவை செவ்வாய்க்கிழமை (27) சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்து, இந்த வழக்கை புதிய விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த தீர்ப்பு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக இருந்த முந்தைய தீர்ப்பை இரத்து செய்கிறது.
CBFC சான்றிதழ் செயல்முறையை தாமதப்படுத்திய பின்னர், படத்தை மேலும் மீளாய்வுக்கு உட்படுத்தியதால், வெளியீடு நிறுத்தப்பட்டதால், தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சான்றிதழ் மற்றும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் உரிய நடைமுறையின்படி கையாளப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றம் இப்போது வழக்கை மீண்டும் விசாரிக்கும்.















