சீன கடற்படைக்கு எதிரான தற்பாதுகாப்பினை வலுப்படுத்துவதையும், போர் ஏற்பட்டால் முக்கிய கடல் பாதைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக தாய்வான் தனது நாட்டில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலுக்கான கடல் சோதனையை வியாழக்கிழமை (29) நிறைவு செய்தது.
சீனா தனது சொந்தப் பிரதேசமாக உரிமை கோரும் தாய்வான், தனது இறையாண்மை உரிமைகளை நிலைநாட்ட அன்றாடம் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் ஆயுதப் படைகளை நவீனமயமாக்கும் ஒரு இலட்சிய திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை மாற்றியுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்காக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகளின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தையும் தாய்வான் பெற்றுள்ளது.
இது பெய்ஜிங்கின் பிராந்திய உரிமைகோரல்களை நிராகரிக்கும் தாய்வானுக்கு ஒரு திருப்புமுனையாகும்.

எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களாக திட்டமிடப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வரும் நார்வால் (NARWHAL) நிறுவனம் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு அறிக்கையில், NARWHAL என்று பெயரிடப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கு அடியிலான சோதனையினை வெற்றிகரமாக நிறைவு செய்ததாகக் கூறியது.
2027 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது இரண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை பாதுகாப்பு பணிகளில் நிலைநிறுத்து தாய்வான் எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.














