ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர்.
இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும் பார்வைக்கு அதிர்ச்சியூட்டும் வளிமண்டல நிகழ்வாகும்.
இந்த காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஞாயிற்றுக்கிழமை (01) சமூக ஊடகங்களில் பரவின.
அந்தக் காட்சியின் நமது பூமியின் இயற்கை துணைக் கோளைச் சுற்றி பல ஒளிரும் கோளங்கள் இருப்பதைக் காட்டியது.
இந்த அசாதாரண காட்சி சந்திரனின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக ஒரு மாயையை உருவாக்கியதுடன் பார்வையாளர்களை வியப்பிலும் ஆழ்த்தியது.
எனினும், இந்தக் காட்சி கூடுதல் நிலவுகளால் ஏற்படவில்லை, மாறாக பாராசெலீனே (Paraselenae) எனப்படும் வளிமண்டல ஒளியியல் விளைவால் ஏற்பட்டது.
பாராசெலினீ என்றால் என்ன?
மூன் டாக்ஸ்” (Moon Dogs) என்பது வானில் நிலவைச் சுற்றித் தோன்றும் ஒரு அழகான மற்றும் அரிய ஒளி நிகழ்வாகும்.
அறிவியல் ரீதியாக இதை (Parashelene) என்று அழைப்பார்கள்.
- இது எப்படி உருவாகிறது?
வானில் மிக உயரத்தில் இருக்கும் சிர்ரஸ் (Cirrus) மேகங்களில் உள்ள சிறிய பனிக்கட்டிகள் (Ice Crystals) வழியாக நிலவின் ஒளி ஊடுருவும்போது, அந்த ஒளி சிதறடிக்கப்படுகிறது (Refraction). இதன் விளைவாக, நிலவின் இருபுறமும் பிரகாசமான ஒளிப் புள்ளிகள் தோன்றுகின்றன.
- இதை எப்போது பார்க்கலாம்?
- நிலவு முழுமையாக (பவுர்ணமி) அல்லது மிகத் தெளிவாக இருக்கும்போது இது அதிகம் நிகழும்.
- குளிர்கால இரவுகளில், மேகக்கூட்டங்கள் மிக உயரத்தில் இருக்கும்போது இதைக் காண அதிக வாய்ப்பு உள்ளது.
- பொதுவாக, நிலவிலிருந்து 22 டிகிரி கோணத்தில் இடது மற்றும் வலது புறங்களில் இவை தென்படும்.
- இது பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
- நிலவைச் சுற்றி ஒரு வட்டமான வளையம் (Halo) இருப்பதைப் போலத் தோன்றும்.
- அந்த வளையத்தின் விளிம்புகளில் இரண்டு சிறு நிலவுகள் இருப்பது போன்ற மாயையை இது உருவாக்கும்.
- சில நேரங்களில், இது நிலவின் நிறத்திலேயே இருக்கும், சில நேரங்களில் வானவில் போன்ற மங்கிய நிறங்களிலும் தெரியும்.
இதே போன்ற நிகழ்வு பகலில் சூரியனைச் சுற்றி நடந்தால், அதை ‘சன் டாக்ஸ்’ (Sun Dogs) என்று அழைப்பார்கள். இது நிலவை விட சூரியனில் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.


















