• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மனித நேயமும், மதி நுட்பமும் ஆற்றலும் மிக்க எதிர்காலச் சந்ததியினரையும், சுதந்திரமான இறையாண்மைமிக்க தேசத்தையும் கட்டியெழுப்பும் பாணியில் தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் நம் அனைவரினதும் பங்களிப்பினை வழங்க வேண்டிய தருணமே தற்போது உருவாகியிருக்கின்றது என்று பிரதமர் கலாநிதி ஹரினி ஹமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது,

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். 

அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.

மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலித்தனமான எதிர்காலச் சந்ததியினருக்காக எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. 

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் உங்கள் அனைவரதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

பலமான பொருளாதார அடிப்படையொன்றின் மீது நாட்டை நிலைப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக அரசியல் மற்றும் அரசியல்வாதி பற்றிய புதிய முன்மாதிரிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதல், இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவத்துடனும், கௌரவத்துடனும், மனிதநேயத்துடனும் மக்களை நேசிப்பதற்காக அவர்களை வழிப்படுத்துதல், கிராமிய வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முன்னுரிமை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய எந்தவொரு குடிமகனும் கைவிடப்படாத விதத்தில், அத்தியாவசிய சமூகக் குழுக்களுக்கான அணுகலை உறுதிப்படுத்தும் நலன்புரிப் பொறிமுறைகளை உருவாக்குதல், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் ஊடாகப் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் உலகின் அனைத்து நாடுகளுடனும் தேசங்களுடனும் மிகவும் நம்பகமான முறையில் உறவுகளைப் பேணக்கூடிய அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாகச் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையை மீண்டும் ஒரு வர்த்தக நாமமாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த இலக்குகளை அடைவதற்காகக் குறுகிய அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டிய காலமே ஆரம்பமாகியிருக்கின்றது. அதற்காக அனைத்து இலங்கை மக்களும் மிகவும் பலமாகவும் நம்பிக்கையுடனும் அணிதிரளுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறும் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.

May be a graphic of text that says "금양소이 7េ නිදහස් දින ජාහික සැමරුම தேசிய சுதந்திர தின விழா National Independence ay Celebration ගොඩනගමු ලංකා இலங்கையைக் ட்டியெழுப்புவோம் REBUILDING SRI LANKA மனித நேயமும், மதிநுப்பமும், ஆற்றலும் மிக்க எதிர்காலச் ாலச் சந்ததியினரையும், கதந்திரமான, இறையாண்மைமிக்க தேசத்தையும் கட்டியெழுப்பும் பணியில், தனிப்பட்ட ர்தியிலும் கூட்டாகவு வும் நம் அனைவரினதும் பங்க பங்களிப்பை வழங்க வேண்டிய தருணமே தற்போது 2 ருவாகியிருக்கின்றது. கலாநிதி ஹரிணி அமரசூரிய அமரசு இலங்கை பிரதமர்"

Related

Tags: Harini AmarasuriyaIndependence dayசுதந்திர தினம்ஹரினி ஹமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Next Post

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

Related Posts

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!
இலங்கை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!
இலங்கை

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!
இலங்கை

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

2026-02-04
இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!
இலங்கை

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

2026-02-04
அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்
இலங்கை

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

2026-02-04
Next Post
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் - சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் –  திலித்

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே இறுதி உறுதிப்பாடாக இருக்க வேண்டும் - திலித்

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

0
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

0
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

0
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

0
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

0
நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

2026-02-04

Recent News

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.