முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் 2026 ஏப்ரல் 24 வரை ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2009 மார்ச் 31, மற்றும் 2013 டிசம்பர் 12 க்கு இடையில் தனியார் வங்கிகளில் மூன்று நிலையான வைப்பு கணக்குகளில் சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ. 59 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வைப்பிலிட்டதன் மூலம் பிரதிவாதிகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறி, சட்டமா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.














