கான்பூர் நகரின் உயர் ரக குவால்டோலி பகுதியில் ஆறு பேர் காயமடைந்து பல வாகனங்களை சேதப்படுத்திய லம்போர்கினி கார் விபத்து தொடர்பாக புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை இந்தியப் பொலிஸார் இன்று (12) கைது செய்தனர்.
பெப்ரவரி 8 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் விஐபி சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
10 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான லம்போர்கினி ரெவல்டோ என்ற சொகுசு இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார், பாதசாரிகள் மற்றும் பிற வாகனங்கள் மீது மோதியது.
பின்னர், ஒரு தடுப்புச் சுவருடன் மோதுண்டு நின்றது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் மிஸ்ரா காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் அவருக்கு எதிராக அலட்சியமாகவும் வேகமாக வாகனம் ஓட்டுதல், உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் மற்றும் ஆபத்தான வழிகளில் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
















