ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள் கேப் கனாவெரலில் இருந்து விண்வெளிக்கு சென்றனர்.
மருத்துவக் காரணங்களால் முன்கூட்டியே பூமிக்குத் திரும்பிய வீரர்களுக்குப் பதிலாக, நான்கு புதிய விண்வெளி வீரர்கள் நேற்று (14) சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
நாசாவின் 65 ஆண்டு கால மனித விண்வெளிப் பயண வரலாற்றில் இத்தகைய மருத்துவ வெளியேற்றம் இதுவே முதல் முறையாகும்.
இவர்கள் அடுத்த 8 முதல் 9 மாதங்கள் வரை விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
















