அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னர் அவசர அதிகாரங்களின் கீழ் அமல்படுத்திய தங்கள் வரி நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்குப் பின்னர், பெரும்பாலான நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு10வீத ‘தற்காலிக இறக்குமதி வரி’ விதிக்கும் அறிவிப்பை கையெழுத்திட்டு அமல்படுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி, புதிய வரி பெப்ரவரி 24ஆம் திகதி அமலுக்கு வரும்.
இந்த நடவடிக்கை ‘அடிப்படை சர்வதேச கட்டணப் பிரச்சனைகள்’ தீர்வை நோக்கி எடுக்கப்பட்டதாகவும், 1974 வர்த்தக சட்டத்தின் 122வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று உச்சநீதிமன்றம் ,தீர்ப்பில் 6-3 வாக்குகள் விகிதத்தில் டிரம்ப் அவசர அதிகாரச் சட்டத்தின் கீழ் பரவலான வரிகளை விதித்ததற்கு தனது அதிகாரத்தை மீறியுள்ளதாக அறிவித்தது.


















