மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள், உற்பத்தியைக் குறைத்துள்ளதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான சர்வதேச, மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது.
இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18வீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20வீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியிருந்ததுடன்
அதன் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இது அமைந்துள்ளமையும் குறிப்பிடத்க்கது.
















