• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு இந்துக் கல்லூரியில் அரோகரா முழக்கம்!

Hanushya P by Hanushya P
2026/03/29
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு 4 – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ‘இந்துக் கல்லூரி கொழும்பு’ வளாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலயத்தின் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மங்களகரமான சித்திரத்தேர் இரதோற்சவப் பெருவிழாவும் நேற்றைய தினம் மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றன. விசுவாவசு வருடம் தை மாதம் 25-ஆம் நாள் (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் ஆகம முறைப்படி நடைபெற்று வந்த மண்டலாபிஷேக பூஜைகளின் நிறைவு விழாவான நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் விசேட அபிஷேகங்களும் மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகளும் இடம்பெற்றன.
நேற்று மாலை 5.00 மணியளவில் விசேட பூஜைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் வித்தக விநாயகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மங்கள வாத்தியங்கள் முழங்க தேர்ப்பவனி ஆரம்பமான நிலையில், அதில் கல்லூரியின் கலாச்சார பேண்ட் வாத்தியக் குழுவினரின் மிடுக்கான அணிவகுப்பு விழாவிற்கு கம்பீரமான சூழலை ஏற்படுத்தியது. அத்துடன் இந்துக் கல்லூரி கொழும்பு ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் பல்வேறு கடவுள் வேடங்களைத் தரித்து மேற்கொண்ட அணிவகுப்பு காண்போரைக் கவர்ந்ததுடன் விழாவிற்கு கூடுதல் மெருகூட்டியது.

மேலும் மாணவர்களின் தேவார பாராயண பஜனைப் பாடல்களின் பக்திபூர்வமான அணிவகுப்புடன் விநாயகப் பெருமானின் சித்திரத்தேர் லோரன்ஸ் வீதியிலிருந்து புறப்பட்டு காலி வீதி, டிக்மன் வீதி, டுப்ளிகேஷன் வீதி, மக்ளியட் வீதி மற்றும் லயாட் வீதி வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தது.
வீதியெங்கும் திரண்டிருந்த அடியார்கள் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டதுடன்இ மீண்டும் லோரன்ஸ் வீதி வழியாக சித்திரத்தேர் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட பூஜைகளுடன் மண்டலபூர்த்தி விழா சிறப்பான முறையில் நிறைவுபெற்றது.

இந்துக் கல்லூரி கொழும்பு தனது 75 ஆண்டுகால கல்விப் பணியின் (75 லுநயசள ழக டுநபயஉல) மைல்கல்லைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில் இக்கோவில் திருவிழா நடைபெற்றமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதிவாழ் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலைச் சமூகம் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Related

Tags: BambalapitiyaHindu College ColomboMandalabhishekam ceremonyRathodsavam festival
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகக்கிண்ண தகுதிச்சுற்று – அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி

Next Post

மத்திய கிழக்கில் வெடித்தது அடுத்த மோதல்! ஈரானின் இலக்கானது பஹ்ரைன் அலுமினிய ஆலை!

Related Posts

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் !
இலங்கை

உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்!

2026-03-29
இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!
இலங்கை

வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன்.

2026-03-29
டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் விமானப்படையின் புதிய கணனி மையம் திறப்பு!

அபியோகய- உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள் எனும் நூலின் வெளியீட்டு விழா
இலங்கை

அபியோகய- உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள் எனும் நூலின் வெளியீட்டு விழா

2026-03-29
Next Post
மத்திய கிழக்கில் வெடித்தது அடுத்த மோதல்! ஈரானின் இலக்கானது பஹ்ரைன் அலுமினிய ஆலை!

மத்திய கிழக்கில் வெடித்தது அடுத்த மோதல்! ஈரானின் இலக்கானது பஹ்ரைன் அலுமினிய ஆலை!

அபியோகய- உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள் எனும் நூலின் வெளியீட்டு விழா

அபியோகய- உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள் எனும் நூலின் வெளியீட்டு விழா

டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் விமானப்படையின் புதிய கணனி மையம் திறப்பு!

டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் விமானப்படையின் புதிய கணனி மையம் திறப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

0
எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் !

உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்!

0
இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

0
20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வீதியில் இறங்கிய லட்சக்கணக்கான மக்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.