பொரலஸ்கமுவவின் மலானி புலத்சிங்கல மாவத்த பகுதியில் நேற்றிரவு இரவு (04) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஆவார்.
இறந்தவர் ‘கோஸ் மல்லி’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொரலஸ்கமுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













