பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியது தொடர்பான விசாரணையின் அடிப்படையில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
இந்தக் கொடுக்கல்-வாங்கல் மற்றும் அந்தக்குடியிருப்பை வாங்கியது தொடர்பான சூழல் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.













