இந்தியாவிலும் இலங்கையிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த வழிபாடுகள் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதுடன் வழிபாடுகளில் அரசியல் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வழிபாடுகளின் நிறைவில் இந்திய மக்களுக்கான பிராத்தனையுடன் பிரதமல் மோடிக்கான கடிதங்கள் இந்தியத் துணைத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















