இந்தியா – வங்காளதேசம் இடையே ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி அடுத்த வாரத்தில் 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்காளதேச விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


















