• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில்  மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம்- ஆ.கேதீஸ்வரன்

யாழில் மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம்- ஆ.கேதீஸ்வரன்

shagan by shagan
2022/01/06
in இலங்கை
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு, அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதி, நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு  மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டில் இருந்து ஒருவர் மலேரியா தொற்றுடன் இங்கே வந்தால் உள்ளூரிலே இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எவ்வாறு இந்நோயினை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். குறிப்பாக மலேரியா உள்ள நாடுகளுக்கு செல்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

2012ஆம் ஆண்டுக்கு பின்னர் நான்கு வருடங்கள் மலேரியா தொற்றாளர்கள் இல்லாமல் தக்க வைத்துக் கொண்ட படியால் 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை மலேரியா அற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை உலர் வலயப் பிரதேசங்களில் மலேரியா நோயை பரப்பக்கூடிய அனோபிலிஸ் காணப்படுகின்றது. தென்பகுதியை பொறுத்தவரை மலேரியா நோயை ஏற்படுத்தக்கூடிய நுளம்புகள் காணப்படவில்லை.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவை பரப்ப கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை எங்களுக்கு மிகவும் ஒரு அபாயகரமானது

யாழ் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நுளம்பு மூலம் எமது பகுதியிலும் மலேரியா பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகிறது மலேரியாவை பரப்பக்கூடியநுளம்புகள் எங்களுடைய பிரதேசங்களில் தாராளமாக இருக்கின்றன

பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் இதைவிட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற மலேரியா பரவல் உள்ள நாடுகளுக்குச் செல்பவர்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

அங்கு சென்று திரும்பும் பொழுது எந்தவித அறிகுறியும் இன்றி மலேரியா நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உண்டு.

இது ஏற்படாமல் தடுக்க தடுப்பு மாத்திரைகள் காணப்படுகின்றன. அவற்றை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளமுடியும்.

வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாதத்திற்கு முன்பு,அதன் பின்னர் அந்த நாடுகளில் தங்கி இருக்கின்ற காலப்பகுதியில், நாட்டுக்கு திரும்பிய பின்னர் என தொடர்ச்சியாக குளுமையான பயன்படுத்த வேண்டும். இதை பின்பற்றினால் மலேரியா தொற்று ஏற்படாது. அதைமீறி மலேரியா தொற்று ஏற்பட்டாலும் நோய் தாக்கம் தீவிரமாக இருக்காது.

இவ்வாறான நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த பின்னர் ஒரு வருட காலப்பகுதிக்கு போதனா வைத்தியசாலை,பொது வைத்தியசாலை , ஆதார வைத்தியசாலை போன்றனவற்றுக்கு சென்று மலேரியா பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

மலேரியா நோய் என இனங்காணப்பட்டவர்கள் மூன்று வருட காலத்திற்கு இரத்ததானம் செய்யக்கூடாது.எனவே நுளம்புகள் பரவாது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்”என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அவுஸ்ரேலியா முதல் இன்னிங்ஸில் 416-8: துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து!

Next Post

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை – குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!

Related Posts

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
இலங்கை

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

2026-04-07
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்

2026-04-07
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

2026-04-07
கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!
இலங்கை

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

2026-04-07
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

2026-04-07
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!

2026-04-07
Next Post
வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை – குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை - குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்  – வீடு எரிந்து நாசம்!

மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் - வீடு எரிந்து நாசம்!

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைவு

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

0
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

0
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

0
குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

குவாண்டம் பேட்டரி: சார்ஜ் செய்யும் முறையில் புதிய புரட்சி

0
மீண்டும் திறக்கப்பட்டது சவூதி – பஹ்ரைன் பாலம்!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.