நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சற்று நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
இதன்போதே குறித்த நியமனங்கள் தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.
















