அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனிமேல் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
20 ஆவது திருத்தத்திற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.