நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே, மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்காக மட்டும் இன்றும் நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெற்றோல் மட்டுமே வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இன்று பிற்பகல் நாட்டில் இயங்கி வரும் 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இன்னும் சில வாரங்களில் டீசலைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















