ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை திகதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பை வாசித்தனர்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினர்.