உலக வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் நேற்று கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.