முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அவர் நாடாளுமன்றத்திற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியில் 4ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்து பாதுகாப்பாக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர் திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும் அவர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இன்று நாடாளுமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.