அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டார்.
அமைச்சரவை நியமிக்கப்படாமையினால், அமைச்சர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டிய வாய்மொழி கேள்விகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அவர் அவர் குற்றம் சாட்டினார்.
எனவே எப்போது அமைச்சரவை நியமிக்கப்படும் என ஒரு திகதியை இந்த நாடாளுமன்றத்திற்கு கூற வேண்டும் என தெரிவித்த அவர், அவ்வாறு இல்லையெனில், அமைச்சரவை நியமிக்கப்படும்வரை நாடாளுமன்றத்தின் பிரச்சினைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.