• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு!

ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூல ஆவணம் கையளிப்பு!

shagan by shagan
2022/08/11
in இலங்கை
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் .

ஜனாதிபதி செயலகத்தில், நேற்று மாலை (புதன்கிழமை) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் ஜனாதிபதியினால் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. எந்த வகையிலும் தகுதியற்ற ஒருவரை தலைவராகக் கொண்டு, அவருக்கு விருப்பமான முறையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தை எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது, அவர் அதற்கு உடன்பட்டார்.

அது மாத்திரமின்றி, இந்த நாட்டில் பொருளாதாரம் சீரழிந்தமைக்கு இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கியமையே பிரதான காரணம். இந்த அரசாங்கத்துக்கு முன்னர் ஆட்சியிலிருந்த ஜனாதிபதியின் தலைமையிலான அரசு, இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாகக் கொண்டே ஆட்சியை அமைத்தது. இனவாதத்தை பரப்புவதன் மூலமே தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்தலாம் எனவும் எண்ணி, தொடர்ச்சியாக இனவாத சக்திகளை வளரவிட்டனர்.

அதனால்தான், இந்த நாடு குட்டிச்சுவராகி, ‘கியூ’ யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இனவாத, மதவாத சக்திகளின் கைகள் ஓங்கவிடாமல் தடுக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினோம்.

எதிர்காலத்தில், சர்வகட்சிகளையும் இணைத்து அரசு முன்னெடுத்துச் செல்லவுள்ள வேலைத்திட்டத்திற்கு, எமது கட்சியின் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி வேண்டிய போது, ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்காக நாட்டு நலனை முன்னிறுத்தி, பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என நாம் உறுதியளித்தோம்.

தற்போது  நாடாளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு அரசியல் சீர்திருத்தத்திலும் கட்சிகளின் நலனுக்கப்பால், நாட்டு நலனை முன்னிறுத்தி அதனைக் கொண்டுவர வேண்டும் என நாம் தெரிவித்தோம்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் இதன்போது வலியுறுத்தினோம். குறிப்பாக, மன்னார் – புத்தளம் பாதையை திறத்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவித்து, அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினோம்.

அத்துடன், தாமதமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினோம்.

விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் தமது தொழிலை சிரமமின்றி மேற்கொள்வதற்காக, அவர்களுக்கு தேவையான எண்ணெய் வசதிகளை வழங்குமாறு வேண்டிக்கொண்டோம்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு மற்றும் கட்டுப்பாட்டு விலையின்றி மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க ஆவன செய்யுமாறும் கோரினோம்.

மேலும், அவசராகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க வேண்டாமென வலியுறுத்தியதுடன், ஏற்கனவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தன் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் இருப்பவர்களை அவசரமாக விடுதலை செய்யுமாறும், சிறிய சிறிய காரணங்களுக்காக போராட்டக்காரர்களை அநியாயமாகக் கைது செய்வதையும், பழிவாங்குவதையும் உடன் நிறுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தோம்.

இதேபோன்று, தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்கள் எதிர்நோக்கும் பல முக்கியமான பிரச்சினைகளை எடுத்துரைத்து, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தோம். அத்துடன், மக்கள் நலன் குறித்த இன்னும் பல முக்கிய விடயங்கள் அடங்கிய, எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, அவற்றை துரிதகதியில் நடைமுறைப்படுத்தித் தருமாறும் வேண்டுகோள் விடுத்தோம்” என்று கூறினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Next Post

காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணி அபிவிருத்தி இல்லை

Related Posts

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

2026-05-08
யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!
இலங்கை

யாழ்தேவி புகையிரத சேவை இனி வாரத்தில் மூன்று நாட்களும்!

2026-05-08
வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!
இலங்கை

வியட்நாம் சோசலிசக் குடியரசின் முதல் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி!

2026-05-08
மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !
இலங்கை

மட்டு சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் !

2026-05-08
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனை மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-05-08
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு !

2026-05-08
Next Post
பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணி அபிவிருத்தி இல்லை

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது!

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்பாரா ஜனாதிபதி? – இறுதி முடிவு  இன்று!

போர்க் குற்றச்சாட்டை கையிலெடுத்த சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினார் கோட்டா !

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

0
யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.