வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு ஏற்றதல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல அரிசிகளும் மனித பாவனைக்கு ஏற்றவை என அனைத்துப் பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், விவசாய அமைச்சர் எந்த அடிப்படையில் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் எனத் தெரியவில்லை எனவும், அவ்வாறான அறிக்கை தம்மிடம் இருந்தால் அதனை அவர் முன்வைக்க வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனத்துக்காக இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.















