அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த மதிய உணவில் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள் அடங்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம், உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போசாக்கு விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், ஆரம்பப் பிரிவுகளில் உள்ள பிள்ளைகளின் போசாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.