இலங்கை அணியினர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகவே ஒரு நாடாக இலங்கையை வெற்றி பெற வைப்பது கடினமான காரியம் அல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு குழுவாக இணைந்து செயற்பட்டமை இலங்கை ஆசிய கிண்ணத்தை கைப்பற்ற உதவியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய கிண்ணம், ஆசிய வலைப்பந்து சம்பியன், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில்உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.















