எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளது.
கடந்த வருடம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி நீர்கொழும்பு கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையிலும் அதனை சூழவுள்ள கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்தது.
இந்த தீவிபத்து காரணமாக அந்த கப்பலில் இருந்த கொள்கலன்கள் உட்பட சுமார் 1700 மெற்றிக் தொன் சிதைவுகள் கடலில் கலந்துள்ளது.
இந்நிலையில் நாளை அல்லது நாளை மறுதினம் சீனக் கப்பல் இங்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.














