• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

சுதந்திர தின அரச விழாவின் செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை – ஜனாதிபதி அலுவலகம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/07
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

75ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு மக்களை கட்டாயப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் குறுகிய அரசியல் செயல்முறையின் மற்றொரு தொடர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.

பொய்யான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தி, அரசாங்கத்தை மக்கள் வெறுக்கச் செய்வதும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதுமே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதற்காக, சுதந்திர தின விழாவின் போது நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுத்தது கூடத் தவறு என்று மக்களை நம்ப வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், அழைப்பின் பேரில் உயர்மட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளான ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே (Takei Shunsuke), பூட்டானின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் ஜெய் பிர் ராய்  (Jai Bir Rai), மற்றும்  மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (Abdulla Shahid) பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.  ஏ.கே. அப்துல் மொமன் (A.K. Abdulla Momen) பாகிஸ்தான் வெளிவிவகார இணை அமைச்சர் ஹினா ரப்பானி கர் (Hina Rabbani Khar), இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி. முரளீதரன் (V. Muraleedharan), நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal), பொதுநலவாயத்தின் பொதுச் செயலாளர் பெட்றீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland) ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சுமார் 3200 உயர் அதிகாரிகளும் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 6670 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்காக இந்த நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்வில் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உரிய முறையில் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, போதுமான நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை தேவையற்ற செலவு என கூற முடியாது.

அதிகளவான மக்கள் கூடும் உத்தியோகபூர்வ அரச நிகழ்வில் இவ்வாறான ஒரு அம்சம் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாமை நாட்டுக்கே அவமானம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன், கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 5.8 மில்லியன் ரூபாவை இந்த நிகழ்வுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது.

இந்த நிகழ்விற்கான ஆரம்ப செலவை கல்வி அமைச்சு மதிப்பிட்டிருந்த போதிலும், அந்த பணம் எதுவும் செலவிடப்படவில்லை.

தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது பொதுவானதொரு விடயமாகும். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் அதிகாரபூர்வ அரச விழாவிற்கு செலவிடப்பட்ட தொகையானது மதிப்பிடப்பட்ட தொகையை விடவும் மிகக் குறைவு என்பதை வலியுறுத்த வேண்டும்.

அதன்படி, இவ்வருடம் நடைபெற்ற 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கு அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதங்கள் மட்டுமே ஆகும்.

மேலும், கடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக அரசாங்கம் மிகக்குறைவாகவே செலவிட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வேளையில் இப்படி ஒரு அரச விழாவை நடத்துவது நாட்டை மீண்டும் எழுச்சி பெறத் தயார் செய்வதாகத் தெரிகிறது.

மறுபுறம், இலங்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு  தேவையான துணிச்சல் இலங்கை அரசிடம் இருப்பதாகவும், நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பெருமையை மீட்டெடுக்க நாடு தயாராக உள்ளது என்பனவும் இந்நிகழ்வின் மூலம் உலகிற்குச் சொல்லும் செய்திகளாக அமைந்துள்ளன.

எனவே, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய சுதந்திர தினம் போன்ற பெருமைக்குரிய அரச நிகழ்வு தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரங்களை ஜனாதிபதி அலுவலகம் வருத்தத்துடன் நிராகரிக்கிறது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: அரச விழாபோலிப் பிரச்சாரங்கள்ஜனாதிபதி அலுவலகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சனைக்குரியது – ஐரோப்பிய ஒன்றியம்

Next Post

13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்தப்பிக்குகள்

Related Posts

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இலங்கை

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

2026-04-09
கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்
இலங்கை

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

2026-04-09
இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!
இந்தியா

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

2026-04-09
புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து
இலங்கை

புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

2026-04-09
சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்
இலங்கை

சிங்கராஜா வனப்பகுதியின் குடவ நுழைவாயில் மூடல்

2026-04-09
38-வது ஆண்டு நினைவேந்தல் ஊர்திப்பவனி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணம்!
இலங்கை

38-வது ஆண்டு நினைவேந்தல் ஊர்திப்பவனி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணம்!

2026-04-09
Next Post
13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் – பௌத்தப்பிக்குகள்

13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் - பௌத்தப்பிக்குகள்

வவுனியா சுற்றுலாமைய குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஆளுனர் பணிப்பு!

சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி !

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

2026 தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

0
கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

0
இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

இந்திய – பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களிடையே சந்திப்பு!

0
புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

புத்தாண்டு உணவுக் கட்டுப்பாட்டை மீறினால் ஆபத்து

0
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.