உள்ளுராட்சிமன்ற தேர்தல் தாமதிப்பதற்கு ஜனாதிபதியே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை காலமும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தாமதிப்பதற்கான குற்றச்சாட்டு, திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சகர் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்தது எனவும் இன்று ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறிய கருத்துக்களில் இருந்து ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.















