அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
இன்று பிற்பகல் நடந்த கோப் குழுவின் கூட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.